Thursday, December 18, 2008

487. மும்பையில் ரத்தம் காயாத நிலையில் சென்னையில் கிரிக்கெட் மேட்ச் தேவையா?

நேற்றிரவு NSG கமாண்டோக்களுக்கு ரூ.15000 தான் சம்பளம் என்பதையும், மும்பை தாக்குதலின்போது அவர்களை விமான நிலையத்திலிருந்து அழைத்து வருவதற்கும், வெற்றிகரமான ஆபரேஷனுக்குப் பிறகு அவர்களை கூட்டிச் செல்வதற்கும் மாநகரப் பேருந்துகள் பயன்படுத்தப்பட்டன என்பதையும் ஒரு செய்தியில் வாசித்தபோது, நிஜமாகவே சம்ம கடுப்பாக இருந்தது.

அதோடு, இந்த சூழ்நிலையில் சேப்பாக்கத்தில் ஒரு கிரிக்கெட் மேட்ச்சை, 300 கமாண்டாக்கோள் மற்றும் 5000 போலீசாரின் துணையோடு (இந்த பாதுகாப்புக்கான செலவை BCCI ஏற்குமா அல்லது மக்கள் வரிப்பணத்திலிருந்தா?)நடத்தி என்ன சாதிக்க நினைக்கிறோம் என்ற கடுப்பும் சேர்ந்து கொள்ள ஒரு காட்டமான பதிவு போட்டுத் தாக்கலாம் என்று நினைத்து, நேரமின்மையால் கை விட்டேன் !!! நல்லவேளை எழுதாமல் விட்டது நல்லதுக்குத் தான், இல்லாவிட்டால், இன்று ஒரு FAMOUS இந்திய வெற்றியைப் பற்றி எழுத முடியாமல் போயிருக்கும்! என்ன புரிகிறதா ? "என்னடா இவன், நேற்று கிரிக்கெட் மேட்ச் எதற்கு என்று பதிவு போட்டவன், இன்று இந்திய வெற்றியை சிலாகித்து இன்னொரு பதிவு போட்டிருக்கிறான்" என்று பதிவுலக நண்பர்கள் என்னை துவைத்து காயப் போட்டிருப்பார்கள் இல்லையா ?? ;-)

சரி, மேட்டருக்கு வருகிறேன். ஞாயிறன்று சேவாகின் விளாசலை பார்த்தபோதே திங்கள் ஆபிசுக்கு "சுட்டி" அடிக்க முடிவு செய்து விட்டேன்! அதை Working from Home என்றும் சொல்வதுண்டு :) 68 பந்துகளில் சேவாக் அடித்த 83 ரன்கள் தான் இந்த வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. அன்றைய ஆட்ட முடிவில் ஸ்கோர் 131-1 என்ற அளவில் இருந்ததால் தான் நம்மால் முடியும் என்ற நம்பிக்கை மற்ற மட்டைக்காரர்களுக்கு ஏற்பட்டது !!! சேவாக்கை பற்றி சைமன் ஹியூஸ் (daily telegraph) கூறியிருப்பதை இங்கே நினைவு கூர்கிறேன்.
To most batsmen an 85 mph cricket ball equals threat. To Sehwag it spells opportunity!!!

32 ஆண்டுகளுக்கு முன் 1976-இல் மேற்கிந்திய அணிக்கு எதிரான (port of spain) டெஸ்ட் ஆட்டத்தில், இந்தியா 403 என்ற வெற்றி இலக்கை 'துரத்தியபோது', நான்காம் நாள் முடிவில் நமது ஸ்கோர் 134-1. அந்த ஆட்டத்தில் நாம் வெற்றி பெற்றோம், இந்த சேப்பாக்க ஆட்டத்தில் சேவாக் புண்ணியத்தில் 131-1, வரலாறு திரும்பும் என்று எண்ணுவதற்கு இந்த ஒரு காரணம் (எனக்கு!!) போதாதா என்ன ???

இறுதி நாள் டிராவிட்டும், லஷ்மணும் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பியபோது, சச்சின் நிதானமாக ஆடிக் கொண்டிருந்தாலும், வெற்றி அவ்வளவு எளிதில்லை என்று தான் நினைத்தேன். யுவராஜ் களத்தில் நுழைந்தவுடன், அப்போது திறமையாக பந்து வீசிக் கொண்டிருந்த பிளின்டாஃப், ஒவ்வொரு பந்தை வீசி முடித்தவுடன் யுவராஜை முறைத்தார், பேச முயற்சித்தார். அவரை வம்புக்கு இழுத்து அவரது concentration-ஐ கலைத்து அவுட்டாக்க (பிரம்ம) பிரயத்தனப்பட்டார். ஆனால், யுவராஜோ அவரை துளிக்கூட லட்சியம் செய்யாமல் அவருக்கு தன் முதுகைக் காட்டியது நல்ல சுவாரசியம் :) ஆஸ்திரேலியர்களின் sledging போல் அல்லாமல் இது ஒரு Friendly Banter அளவிலேயே இருந்தது! இது போன்ற சங்கதிகள் தான் டெஸ்ட் கிரிக்கெட்டின் மெருகை கூட்டுகின்றன.

இந்த நிலையில் 163 ரன்கள் வேண்டியிருந்தன. சச்சினின் சகவாசத்தில், யுவராஜ் மலர்ந்தார் (அதாங்க, Yuvaraj blossomed in the company of Sachin:) ). தொய்வில்லாமல், இருவரும் ரன்களை குவித்தனர். இருவருக்கும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் என்ற நிலையில், நம்பிக்கை துளிர்விட்டது. சச்சினின் முகத்தில் நிலவிய அமைதியையும் நம்பிக்கையையும் பார்த்தபோது, 1999-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 14 ரன்களில் இந்தியா வீழ்ந்தது போல இம்முறை நடக்காது என்று தான் தோன்றியது. ஷார்ஜாவில் மியதாத் அடித்த கடைசி பந்து சிக்ஸரும், சேப்பாக்க பாக் தோல்வியும் என் வாழ்நாள் உள்ளவரை உறுத்திக் கொண்டே தான் இருக்கும் !!!

வெற்றிக்கு 40 ரன்கள் என்ற நிலையில், யுவராஜ் கொஞ்சம் தடாலடியாக ஆட முயற்சித்தார்। நல்லவேளை அவுட்டாகவில்லை। சச்சின் ஓடி வந்து, 1999-ஐ ஞாபகப்படுத்தி, ரிஸ்க் எடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தினார்। (இதை சச்சினே ஆட்டம் முடிந்தவுடன் கூறினார்!). 88-ல் இருந்த சச்சின் பனேசரின் பந்து வீச்சில் தொடர் பவுண்டரிகள் அடித்து 96க்கு சென்றார்! அப்புறம் 2 ரன்கள், 1 ரன், இப்போது 99 ரன்கள், இந்திய வெற்றிக்கு 4 ரன்கள் தேவை! அந்த ஓவரில் மிச்சமிருந்த 5 பந்துகளையும், யுவராஜ் ரன் எடுக்காமல், defend செய்தபோது, அவரது பெருந்தன்மைக்கு சேப்பாக்க ரசிகர்களிடையே பலத்த கைதட்டல் :)

அடுத்த ஓவரின் 3வது பந்தை, தனக்கு பிடித்தமான paddle sweep வாயிலாக சச்சின் பவுண்டரிக்கு அனுப்பியதில், சச்சினின் 41வது சதமும், ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியும் ஒரு சேர அமைந்தன !!! சச்சினை நினைத்து என் கண்கள் பனித்தன! (இது உண்மையாகவே...நீங்க 'வேற டைப் "கண்கள் பனித்தது" பத்தி நினைச்சா அதுக்கு நான் பொறுப்பில்ல ;-) )

And atlast, the ghosts of Chepauk-1999 (and Barbados-1997) were exorcised forever!

இந்தியா வெற்றி இலக்கை அடைந்தவுடன், களத்திற்கு முதலில் ஓடிவந்து சச்சினுடன் கை குலுக்கியது ஒரு groundswoman. அப்பெண்மணியின் வெட்கம் கலந்த சந்தோஷத்தில் பூரித்த முகம் என் ஞாபகததில் வெகு காலம் நிலைத்திருக்கும் !!! கிரிக்கெட் நம்மூரில் ஏன் இத்தனை பிரபலமாக (cricket is a religion என்ற அளவுக்கு) இருக்கிறது என்பதற்கு அந்தப் பெண்மணியை விட சிறந்த உதாரணத்தை காட்ட இயலாது...

மும்பை தாக்குதலின்போது தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடி உயிர் நீத்த NSG வீரர்கள்/காவலதிகாரிகள் மற்றும் தீயணைப்படை வீரர்கள் குடும்பங்களுக்கு BCCI 2 கோடி ரூபாய் வழங்கியது பாராட்டுக்குரியது.

சச்சின் கூறிய 2 வரிகள் தான், என்னளவில், அவரது சதத்தை விட உயர்ந்தவை.
I dont think any century like this one will be able to compensate the loss people have suffered in the Mumbai attack. Nothing can match their grief but as cricketers this is what we can do to help.
சச்சினின் கிரிக்கெட் திறனுக்கு சற்றும் குறையாதவை அவரது தன்னடக்கமும், எளிமையும், அமைதியும்!!!

எ.அ.பாலா

பி.கு: தமிழ்மணம் சூடான இடுகைகளில் இடம் பெறுவதற்காகவே திட்டம் தீட்டி இப்பதிவின் தலைப்பு வைக்கப்பட்டது :-)

பிற்சேர்க்கை: இம்மாதிரி தலைப்பு வைத்தது சிலபல வாசக நண்பர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது என்று தெரிகிறது, தமாஷுக்காக செய்தது, 'கெட்ட' நோக்கம் எதுவுமில்லை, மன்னிக்கவும் ! இதற்காக (-) அமுக்கி உங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டாமே, ப்ளீஸ் :-)

14 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Hail the Great Indian Victory !

Senthil said...

Bala,
the way u described the match is very professional.
a stunning performance by the Indian team.
But at the back of my mind, teh first pragraph of the article
still lingers..:-(

Senthil

Nilofer Anbarasu said...

//தமிழ்மணம் சூடான இடுகைகளில் இடம் பெறுவதற்காகவே திட்டம் தீட்டி இப்பதிவின் தலைப்பு வைக்கப்பட்டது//

தலைப்பைப் பார்த்துத்தான் படிக்கவே வந்தேன், ஆனால் தலைப்புக்கு சம்பந்தமே இல்லாமல் பதிவைப் படிக்கும் போது எரிச்சல்தான் வந்தது. சூடான இடுக்கையில் வருவது பாராட்டவேண்டிய விஷயம் தான், ஆனால் எத்தனை பேர் பதிவை ரசித்தார்கள், நண்பர்களை வாசிக்க சொல்லி பரிந்துரைத்தார்கள் என்பதும் முக்கியம்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//நண்பர்களை வாசிக்க சொல்லி பரிந்துரைத்தார்கள் என்பதும் முக்கியம்.//

அதெல்லாம் நடக்குதா.........

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஒரு சைமன் ஹியூஸ்//




அப்படினா..........

said...

Please do not mislead the topic. We eagerly enter here to read the relevant interested topic, only to find something else wrapped inside. I am sure with such irate mind, atleast a few would not be bent on clicking hits or votes if that was the main purpose of this post.

மீ.அருட்செல்வம், மாநில செயலாளர். said...

இந்தியன்ங்ற ஒணர்வ இப்பிடித்தாண்னே
ஊட்டி வளக்க முடியும்.

இந்தியாவோட எறையாண்ம சேவாக்கோட கவட்டுக்குள்ள தான் இருக்குங்குற உண்ம உங்களுக்கு தெரியாததா என்ன?

dondu(#11168674346665545885) said...

ஆகககக. நம்ம சச்சின் நிஜம்மாவே பத்து கோல் போட்டு ஆட்டம் ஜெயிச்சுட்டார். :))))))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரவி said...

"தோனியாக" நாமிருந்தால் இந்திய ராணுவ ஆபீசர்ஸ் மெஸ்ஸில் போய் சப்ஜி சாப்பிடலாம்...

கொஞ்சம் போரடித்தால் அவர்களது ஏகே 47 துப்பாக்கியை வாங்கி சுட்டும் பார்க்கலாம்...

இதை பற்றி உங்கள் கருத்து என்ன ?

வந்தியத்தேவன் said...

//அப்பெண்மணியின் வெட்கம் கலந்த சந்தோஷத்தில் பூரித்த முகம் என் ஞாபகததில் வெகு காலம் நிலைத்திருக்கும் !!!//

நல்லதொரு அலசல்.

நானும் பார்த்தேன் சச்சின் எந்தவித அவசரமோ அல்லது அவர்களைப் புறக்கணிக்கவோ இல்லாமல் நிதானமாக சகல மைதான ஊழியர்களுடனும் கைகொடுத்தார். அந்தப் பெண்ணின் படத்தை இணையத்தில் தேடு தேடு என தேடி நானும் கூகுள் ஆண்டவரும் களைத்தேவிட்டோம்.

பிச்சைப்பாத்திரம் said...

அன்புள்ள பாலா,

கமாண்டோக்களின் சம்பளக் கொடுமையை நானும் படித்தேன். இவ்வளவு குறைவான சம்பளத்தில் எப்படி அவர்கள் பொருளாதாரக் கவலையின்றி தீவிரவாதிகளுடன் போராட முடியும் என்று தெரியவில்லை.

அது ஒருபுறமிருக்கட்டும். கமாண்டோக்களின் பிசாத்து சம்பளம் பற்றியும் மக்களின் வரிப்பணம் வீணாவது பற்றியும் சொல்ல வந்த நீங்கள் அதையெல்லாம் இடது கையால் ஒதுக்கி விட்டு பாழாய்ப்போன கிரிக்கெட்டை சிலாகித்து பதிவு போட்டிருப்பது வேதனையாய் இருக்கிறது. மேற்சொன்னவற்றை விட கிரிக்கெட்டிற்கு அதிகம் பிரதானமளிக்கும் உங்கள் மனநிலை மும்பை அசம்பாவிதம் குறித்து இதுவரை எழுதியதையெல்லாம் நீர்த்துப் போகச் செய்கிறதோ என்று தோன்றுகிறது.

அதற்கு நீங்கள் சொன்ன காரணம் முறையானதாய் தெரியவில்லை. இரண்டையும் தனிதனிப் பதிவாகவே போட்டிருக்கலாம். ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது. குறைகூறி் கொண்டிருப்பவர்கள் எது செய்தாலும் அதைச் செய்துக் கொண்டுதானிருப்பார்கள்.

//(-) அமுக்கி உங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டாமே, //

தங்களின் அதிருப்தியை தெரிவிப்பதின் மூலம் உங்கள் பதிவின் மீது விமர்சனம் தெரிவிப்பவர்களையும் நீங்கள் தடுக்க முயல்வது எவ்வகையான கருத்துச் சுதந்திரம் என்றும் தெரியவில்லை.

//தமிழ்மணம் சூடான இடுகைகளில் இடம் பெறுவதற்காகவே திட்டம் தீட்டி இப்பதிவின் தலைப்பு வைக்கப்பட்டது :-)//

காப்பிரைட் சட்டத்தின் படி உங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாமென்றிருக்கிறேன். :-)

enRenRum-anbudan.BALA said...

அன்பின் சுரேஷ்,

//அதற்கு நீங்கள் சொன்ன காரணம் முறையானதாய் தெரியவில்லை. இரண்டையும் தனிதனிப் பதிவாகவே போட்டிருக்கலாம். ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது. குறை கூறி கொண்டிருப்பவர்கள் எது செய்தாலும் அதைச் செய்துக் கொண்டு தானிருப்பார்கள்.
//
ஒப்புக்கொள்கிறேன். தனித் தனி பதிவாக போட்டிருக்க வேண்டும் தான். லேட்டாகத் தான் அந்த ஞானம் பிறந்தது !!! அந்த மாதிரி காரணம் சொன்னது கிறுக்குத்தனம் என்பதையும் உணர்கிறேன் :(

//பாழாய்ப்போன கிரிக்கெட்டை சிலாகித்து பதிவு போட்டிருப்பது
//
அய்யா, "பாழாய்ப்போன" கிரிக்கெட் என் ரத்தத்தில் ஊறிய விசயம், அதில் ஒரு மகத்தான வெற்றியை சிலாகிக்காமல் என்னால் இருக்க முடியாது. ஆனால், பதிவின் 'முன்னுரை' குட்டையைக் குழப்பி விட்டது உண்மை!

//மேற்சொன்னவற்றை விட கிரிக்கெட்டிற்கு அதிகம் பிரதானமளிக்கும் உங்கள் மனநிலை மும்பை அசம்பாவிதம் குறித்து இதுவரை எழுதியதையெல்லாம் நீர்த்துப் போக செய்கிறதோ என்று தோன்றுகிறது.
//
நான் சொன்ன 'காரணமே' அம்மாதிரி தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், ஒரு பதிவில் எழுதிய ஒன்றை வைத்து மற்ற பதிவுகளை வாசகர் எடை போட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

//தங்களின் அதிருப்தியை தெரிவிப்பதின் மூலம் உங்கள் பதிவின் மீது விமர்சனம் தெரிவிப்பவர்களையும் நீங்கள் தடுக்க முயல்வது எவ்வகையான கருத்துச் சுதந்திரம் என்றும் தெரியவில்லை.
//
:-) நீர் நக்கீரன் வழி வந்தவரோ ?கருத்துச் சுதந்திரத்தின் மீது முழு நம்பிக்கை எனக்குண்டு! நான் சொன்னது, பதிவின் தலைப்பு ஏற்படுத்தும் எரிச்சலை வைத்து (-)குத்தாதீர்கள் என்று !!! பதிவின் content ஐ முன் வைத்து அதைச் சொல்லவில்லை !

//காப்பிரைட் சட்டத்தின் படி உங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாமென்றிருக்கிறேன். :-)
//
இந்த ஒரு முறை என் சிறுபிள்ளைத்தனத்தை மன்னித்து விட்டு விடவும் ;-)

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

ஸென்,
வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

அன்பரசு,
சும்மா ஒரு தமாஷுக்குத் தான் தலைப்பு, கோச்சுக்காதீங்க :)

சுரேஷ், அனானி,
வருகைக்கு மிக்க நன்றி.

enRenRum-anbudan.BALA said...

ஒரிஜினல் மனிதன்,
மிக நல்ல கருத்து !!!

டோண்டு,
இந்த "கோல்" மேட்டரை நீங்க சொல்லி சொல்லி எல்லாருக்கும் அலுத்துப் போச்சு, வேற ஏதாவது சொல்லுங்க :)

செ.ரவி,
கருத்துக்கு நன்றி. ஆனா எனக்கு உண்மையா கேள்வியே புரியல ????

வந்தியத்தேவன்,
வாருங்கள் கிரிக்கெட் ஆர்வலரே, இப்ப மகிழ்ச்சி தானே ? :)

அந்தப் பெண்ணின் புகைப்படத்தை நானும் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. ஏதாவது ஸ்போர்ட்ஸ் பத்திரிகையில் கிடைக்கலாம் !!!

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails